தேவதையாய் மாற்றப் போகும் பைனாப்பிள் ஜூஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Loading...

எல்லாருக்கும் அழகாய் இருக்கனும்னு ஆசை. விளம்பரங்களில் வரும் எல்லா அழகு க்ரீம்களும் உங்களை அழகுப்படுத்துவதாகத் தான் கூறும்.

ஆனால் எதுவுமே நிரந்தர அழகை தராது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு வெளியே அழகு படுத்துவதை விட, உள்ளிருந்து கொண்டு வரும் அழகு நிரந்தரமாய் ஆரோக்கியமானதாய் இருக்கும்.

அன்னாசி :

அன்னாசியில் இருக்கும் ப்ரோமெலைன் என்ற என்சைம் சருமத்தில் மேஜிக் செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது.அது சருமத்தை சுத்தப்படுத்தி, நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துகிறது.

இறந்த செல்களை அகற்றும். சருமத்தில் ஏற்படும் பாதிப்பை ரிப்பேர் செய்யும். சருமத்தில் உள்ள வலி, வீக்கம் ஆகியவற்றை காணாமல் போக்கச் செய்யும்.

இவ்வளவு நன்மைகள் கொண்டுள்ள அன்னியாசியை அழகுக் குறிப்புகளில் சேர்க்காமல் போனால் எப்படி.ஆனால் சின்ன மாற்றம் அதை சருமத்தில் உபயோகப்படுத்துவதில்லை. அது உடலில் உள்ளிருந்து செயல்பட்டு மெனியின் அழகைக் கூட்டும்.

எப்படி என்சைமை தயார் செய்வது எனப்பார்க்கலாம்.

தேவையானவை : பைனாப்பிள் -1000கிராம் எலுமிச்சை-300 கிராம் கிவி பழம்-300 கிராம் கற்கண்டு-700 கிராம்.

செய்முறை :

பைனாப்பிளின் தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். கிவி பழத்தினையும் தோலை நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். எலுமிச்சையை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இப்போது மூன்றையும் மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு மூடியுள்ள கண்ணாடி ஜாரில், முதல் பகுதியிலிருந்து ஒரு பைனாப்பிள் துண்டு அதன் மேல் கிவிப் பழத் துண்டு, அதற்கு மேல் எலுமிச்சை துண்டு, பின் அதன் மேலே கற்கண்டு என சேண்ட்விச் போல் வையுங்கள்.

அதற்கு பிறகு பிரித்து வைக்கப்பட்ட மற்ற இரு பகுதிகளையும் இதே வரிசையில் சேண்ட்விச் போல், ஏற்கனவே ஜாரினுள் வைத்த பகுதியின் மேல் வையுங்கள். பின் ஒரு ரேப்பரில் இறுக்கக் கட்டி அதனை காற்றுப்புகாமல் மூடி வையுங்கள்.

இப்போது இந்த கண்ணாடி ஜாரினை வெயில் படாத ஒரு இடத்தில் வையுங்கள். தினமும் இந்த கலவையை குலுக்குங்கள். இது நன்றாக என்சைம் சுரக்க வழிவகுக்கும்.

1 வாரம் கழித்து பார்த்தால் அதில் என்சைம் உருவாகி இருக்கும். அந்த நீர்பகுதியை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இதனை ஃபிரிட்ஜில் வைக்கலாம்.

தினமும் உண்பதற்கு ஒரு மணிநேரம் முன் 2 டேபிள் ஸ்பூன் அளவுள்ள என்சைம் எடுத்து அதில் அரை கிளாஸ் நீர் நிரப்பி குடிக்கலாம்.

அல்லது 30 மி.லி என்சைமிற்கு 10 லிட்டர் நீர் ஒன்றாக கலந்து எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து தினமும் ஒரு கிளாஸ் குடிக்கலாம்.

இந்த ட்ரிங்க் தினமும் ஒரு கிளாஸ் குடித்தால் உங்கள் அழகு கூடும். சருமம் மிளிரும். எத்தகைய உணவினையும் ஜீரணமாக்கும். இந்த ட்ரிங்க் உங்களை எப்போது ஸ்லிம்மாகவே வைத்திருக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close