உங்கள் கழுத்து கருத்துள்ள‍தா? : இதோ சூப்பர் டிப்ஸ்…!

Loading...

சிலர் பார்க்க அழகாக இருப் பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருப் பாக இருக்கும்.. அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடு வது நல்லது.

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவு டர், பாசிப்பயறு மாவு-இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும்.

அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்துக்கழுவி கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து வாராம் 3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக் கும்.

*பப்பாளிபழத்தின் தோல், எலு மிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல்-இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழு த்தில் தேய்த்துக் குளிக்கலாம்.

*முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமை யை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

*பயத்தமாவு, ஆலீவ் ஆயில்,ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந் து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறை யும்.

* சிலருக்கு செயின் போட்டு, அத னால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனைபோக்க சிறிது பால், தேன், எலுமிச்சைசாறு கலந் து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித் து வெது வெதுப்பான நீரில் அலசி விடவும்.

கடலை மாவு தயிர் கலந் தும் தடவலாம். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்துவந்தால் தான் பலன் கிடைக்கும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close