தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்!

Loading...

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்

லைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.

மகா சிரசு முத்திரை                                       

மோதிர விரல் உள்ளங்கை நடுவிலும், ஆட்காட்டி, நடு, கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்க வேண்டும். இருகைகளிலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.

பலன்கள்: காலை, மாலை என 10 நிமிடங்களுக்கு செய்ய, தலைவலி நீங்கும். இந்த முத்திரை செய்வதால், தலை மற்றும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். தலையில் நீர்கோத்து ஏற்படும் தலைவலி, சைனஸ் தலைவலிக்கு (Sinusitis) சிறந்த தீர்வாக அமையும்.

பிராண முத்திரை

மோதிர விரல், சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கலாம். இரண்டு கை அல்லது ஒரு கையிலும்கூட இந்த முத்திரை  பிடிக்கலாம்.

பலன்கள்:
20 – 40 நிமிடங்கள் செய்யலாம். தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த முத்திரையைச் செய்துவர, ஒற்றைத் தலைவலிப் பாதிப்பு குறையும்.

ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது, எந்தப் பக்கம் தலை வலிக்கிறதோ, அந்தக் கையில் முத்திரையை வைத்தாலும் வலி சரியாகும்.  அதிக நேரம் கம்ப்யூட்டர், டி.வி பார்ப்பதால் கண்கள் சோர்வடைதல், பார்வைக் குறைபாடு, எலக்ட்ரானிக் கேட்ஜட்ஸ் மூலமாக ஏற்படும் தலைவலி சரியாக, தொடர்ந்து பிராண முத்திரை செய்துவரலாம்.

சின்மய முத்திரை

சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும்.இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம்.

பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.

அர்த்தசின் முத்திரை

ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

பலன்கள்: 10 – 40 நிமிடங்கள் செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close