தலைமுடி பிரச்சனைகள் உடல் ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Loading...

தலைமுடி அழகை அதிகரித்துக் காட்டுவது மட்டுமல்ல, நம் உடல் ஆரோக்கியத்தையும் வெளிக்காட்டும். தலைமுடி உதிர்வது, முடி மெலிந்து காணப்படுதல், பொடுகுத் தொல்லை போன்றவை சரியான பராமரிப்பு இல்லாமல் மட்டும் ஏற்படுவதல்ல. அதற்கு பின் வேறு சில காரணங்களும் உள்ளன.

குறிப்பாக இந்த தலைமுடி பிரச்சனைகள் நம் உடலில் உள்ள பிரச்சனைகளை நமக்கும் உணர்த்தும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களின் முடிக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆரோக்கியத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு நம் தலைமுடி உடல் ஆரோக்கியம் குறித்து சொல்லும் விஷயங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தலைமுடி உதிர்தல்

ஒரு நாளைக்கு 80-100 முடிக்கு மேல் உதிர்ந்தால், அது சாதாரணம் அல்ல. அப்படி அளவுக்கு அதிகமாக உதிர்ந்தால், நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்றும், உங்கள் உடலில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லை என்றும் அர்த்தம். அதுமட்டுமின்றி, நீரிழிவும் இதனை உணர்த்தும்.

வறட்சியான முடி

உங்களுக்கு முடி அதிகமாக வறட்சியடைந்து மெலிந்து காணப்படுமாயின், அது ஹைப்பர் தைராய்டு இருப்பதை உணர்த்தும். அதிலும் வறட்சியான முடியுடன், உடல் பருமன், எப்போதும் குளிரை உணர்தல் மற்றும் மிகுந்த சோர்வு போன்றவை இருந்தால், நிச்சயம் அது ஹைப்பர் தைராய்டை உறுதி செய்யும். எனவே இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

முடி மெலிந்து இருப்பது

உங்கள் முடி அடர்த்தியாக இருப்பதற்கு புரோட்டீன் தான் காரணம். இந்த புரோட்டீன் உங்கள் உடலில் மிகவும் குறைவாக இருந்தால், முடியின் அடர்த்தி குறைந்து மெலிந்து காணப்படும். எனவே இதனை தடுக்க தினமும் ஒரு வேளையாவது புரோட்டீன் அதிகமாக நிறைந்த டயட்டை உட்கொள்ள வேண்டும்.

நரைமுடி

நரைமுடி வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், தலை முடிக்கு கண்ட ஜெல் அல்லது க்ரீம்களைப் பயன்படுத்தினாலும், தலைமுடி அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி, நிறமிழந்து நரைமுடியை உண்டாக்கும்.

மஞ்சள் நிறத்தில் செதில்கள் வெளிவருவது

பலரும் இதனை பொடுகு என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிடுவார்கள். ஆனால் இப்படி மஞ்சள் நிறத்தில் ஸ்கால்ப்பில் இருந்து செதில்கள் வந்தால், உங்களுக்கு சிவந்த தோலழற்சி உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது. இது ஒரு நாள்பட்ட அழற்சி நிலையாகும். எனவே கவனமாக இருங்கள்.

சிறு வட்ட பகுதியில் முடி அதிகம் உதிர்வது

உங்கள் தலையில் சிறு வட்ட பகுதியில் மட்டும் முடி உதிருமாயின், அந்த நிலைக்கு அலோப்பேசியா ஏரியேட்டா என்று பெயர். இந்நிலை ஒருவருக்கு இருந்தால், அவரது புருவங்கள் அல்லது கண் இமை முடிகள் போன்றவையும் உதிர ஆரம்பிக்கும். சிலருக்கு நீரிழிவு இருந்தாலும், இந்நிலை ஏற்படும்.

தலையின் முன்பக்கம்

முடி கழிதல் தலையின் முன் பக்கம் மட்டும் முடி அதிகம் உதிர்ந்தால், உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். அளவுக்கு அதிகமான டெஸ்டோஸ்டிரோன் தலையின் முன்பக்க முடியை உதிரச் செய்து, மீண்டும் அவ்விடத்தில் முடி வளரவிடாமல் செய்யும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close