குழந்தையின் சருமம் போல உங்கள் சருமமும் ஆக வேண்டுமா? இத ட்ரைப் பண்ணுங்க…

Loading...

குழந்தைகளின் கன்னத்தை செல்லமாக கிள்ளி" ஸோ சாஃப்ட்" என்று சொல்லாதவர்கள் இல்லை. மிருதுவான அந்த கன்னத்தை போல் திரும்பவும் கிடைக்காதா என எல்லா வயதிலும் பெண்கள் ஆசைப்படுவதுண்டு.

குழந்தைப் பருவத்தில் இருக்கும் சருமம் ஏன் வளர்ந்த பின் வருவதில்லை? காரணம் வளர வளர இறந்த செல்களின் எண்ணிக்கை அதிகமாகி, சருமத்திலேயே தங்கிவிடும். இது வெளியேற போதுமான வழியை நாம் தருவதில்லை.

மேக்கப், க்ரீம்கள், தூசு, மாசு நிறைந்த சுற்றுப்புறம், புற ஊதாக்கதிர் என எல்லாமும் சேர்ந்து சருமத்தை பாதிக்கின்றன. போதிய பராமரிப்பும் இல்லாத போது சருமம் பாழாகின்றன. வயதான தோற்றத்தை எளிதில் பெற்று விடுகிறோம்.

வாரம் தவறாமல் சருமத்திற்கு என சிறிது நேரம் அளித்து, அவற்றை புத்துணர்வு கொள்ளச் செய்யுங்கள். மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. உங்கள் சோம்பேறித்தனத்தை உதறிவிட்டு கொஞ்ச நேரம் செலவழித்தால் போதும், என்றும் மென்மையான சருமத்தை நீங்கள் பெறுவீர்கள்.

உங்கள் சருமத்தை பாதுகாக்க முதலில் நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது உடலின் உட்புறமாகத்தான். நிறைய நீர் அருந்துதல் வேண்டும். அவை கழிவுகளை சருமத்தில் தங்கவிடாமல் அகற்றிவிடும். சருமத்திற்கு தொடர்ந்து ஈரப்பத்தை அளிக்கும்.

குழந்தை போல சருமத்தைப் பெற உங்களுக்கான எளிதான டிப்ஸ். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே உங்களை இளவரசியாக்கும் ரகசியங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அவகேடோவைக் கொண்டு செய்யும் இந்த மாஸ்க் சருமத்தில் மேஜிக் செய்யும். நீங்களே உங்கள் சருமத்தைக் கண்டு வியப்பீர்கள். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.

அவகேடோ ஃபேஷியல் மாஸ்க்: தேவையானவை : ஆரஞ்சு சாறு-1 கப் அவகேடோ-1 தேன்- 2 டேபிள் ஸ்பூன்

அவகேடோவை வெண்ணெய் பழமென்றும் அழைப்பார்கள். இது சருமத்தின் அமில- காரத்தன்மையை சமன்படுத்தும். உடலிலுள்ள எல்லா உறுப்புக்களுக்கும் அமில காரத் தன்மை சம நிலையில் இருப்பது அவசியம். சருமத்திலும் அவை சரியாக இருந்தால், சுருக்கங்கள், வறட்சி ஆகியவை ஏற்படாது.

நீங்கள் முகத்திற்கு போடும் கெமிக்கல் கலந்த அழகு சாதனங்களால் சருமம் வறட்சி அடைந்திருக்கும். அந்த பாதிப்பினை அவகேடோ எளிதில் போக்கி ஈரப்பதம் அளிக்கும்.

தேன் சருமத்தைற்கு மிருதுத்தன்மை தரும். அதோடு, சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை தொய்வடையாமல் காக்கும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை சருமத்திற்கு போஷாக்கு அளித்து, சருமத்திற்கு புத்துணர்ச்சி தருகிறது.

செய்முறை : அவகேடோவில் உள்ள சதைபகுதியை எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாற்றினையும், தேனையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது இந்த கலவையை முகத்தில் போடவும்.

15 நிமிடங்கள் கழித்து,வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரம் ஒரு முறை செய்தால், உங்கள் சருமம் மிருதுவாகி என்றும் பளபளப்பாக காணப்படுவது உறுதி. செய்து பாருங்கள். அழகாய் ஜொலிப்பீர்கள்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close