நோயின் அறிகுறியை வெளிப்படுத்தும் தலைவலி

Loading...

மனித உடலில் ஏற்படக்கூடிய வலிகளில் மிக முக்கியமான தலைவலி பற்றி பார்ப்போம்.

நோயின் அறிகுறியை வெளிப்படுத்தும் தலைவலி
தலைவலி மட்டும் அல்ல உடலில் எந்த வலியாக இருந்தாலும் அது உடலில் உள்ள நோயை வெளிப்படுத்தும் அறிகுறிதான். அதாவது உள் உறுப்புகளின் இயக்கம் சரியாக இயங்காத போதுதான் உடலில் பாதிப்புகள் உருவாகுகிறது. மனித உள் உறுப்புகள் சரியான முறையில் இயங்க வேண்டும். மனித உள் உறுப்புகள் அதிகமாக இயங்கினாலும், குறைவாக இயங்கினாலும் நோயை உருவாக்கும்.

எந்த உள் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறதோ எந்த உள் உறுப்பு சார்ந்த நரம்புகளின் வழியாக பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த உள் உறுப்பு சார்ந்த நரம்புகளின் வழியாக வலி ஏற்படுத்துவது தான் முதல் அறிகுறி ஆகும். இந்த வலிதான் மனிதனுக்கு நோயை முன்கூட்டியே அறிவிக்கிறது.

தலைவலி தான் என்று யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். மனம் அமைதியாக இல்லாமல் குழம்பி கொண்டிருந்தாலும், இரண்டு நாட்களுக்கு மேல் மலச்சிக்கல் இருந்தாலும், இரைப்பை சரியாக இயங்காமல் இருந்தாலும், இருதயம், நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், மண்ணீரல் வேகமாக இயங்கினாலும், தலைவலி வரும்.

ஒரே விஷயத்தைப் பற்றியே அடிக்கடி நினைத்து கொண்டு இருந்தாலும், அதிக டென்ஷன், சைனஸ், காது, வயிற்று கோளாறுகள் இவைகளாலும் தலைவலி வரும். தலைவலிகளிலும் சில வகை உண்டு. ஒற்றை தலைவலி (மைக்ரைன்) பசி தலைவலி, கண் பார்வை கோளாறுகளினால் தலைவலி என ஒவ்வொருக்கும் ஒரு காரணத்தினால் தலைவலி வருகிறது. ஆனால் பொதுவான காரணம் நரம்பு களின் இயக்கம் சரியாக இருக்க வேண்டும். அதாவது 72,000 நாடி நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.

மனித உடலில முக்கியமான இரு அமைப்புகள் உள்ளன. அவை. 1. நரம்புகள், 2. நாளமில்லா சுரப்பிகள். சுரப்பிகளை கட்டுப்படுத்தும் வல்லமை திறமை நரம்பு மண்டலத்துக்கு மட்டும்தான் உள்ளது. அதே போல் தலைவலி உள்ள போது மணிப்பூரகம் சக்கரம் மூலாதாரம் சக்கரம் சரியாக இயங்காமல் இருக்கும்.

ஒற்றைத் தலைவலி (மைக்ரைன்) உள்ள போது மணிப்பூரகம், மூலாதாரம், சகஸ்ராரம் ஆகிய மூன்று சக்கரம் சரியாக இயங்காமல் இருக்கும். தலைவலிகளில் சாதாரணமான தலைவலி என்றால் ஓய்வெடுப்பதாலும், மாத்திரை பயன்படுத்துவதாலும் சற்று உறங்குவதாலும் சரியாகி விடும்.

ஓய்வெடுத்தும், உறங்கியும் தலைவலி சரியாகவில்லை என்றால் நரம்பு மண்டல பாதைகளில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் என்பது சற்று வேகம் குறைவாக செல்வதாலும், மற்ற இடங்களில் தேவையான ரத்தம் செல்லாததாலும், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இருதயம் போன்ற உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் இல்லாததாலும் தலைவலி ஏற்படுகிறது.

கழுத்துக்கு மேல் செல்லக்கூடிய நரம்புகளில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டாலும் தலைவலி வரக்கூடும். பொதுவாக மனிதன் இரவில் ஆழ்ந்த தூக்கம் மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 6 மணி நேரம் தொடர்ச்சியாக தூக்கம் இருக்க வேண்டும். அபபோதுதான் மூளையின் அதிர்வலை அதற்குண்டான 3 முதல் 5 வரையான அதிர்வலையாக இருக்கும். இந்த அதிர் வலையின் காரணமாகத் தான் நாளமில்லா சுரப்பிகளும் நன்றாக செயல்பட்டு இயங்கும்.

பகலில் உறக்கத்தின் போது மூளையின் அதிர்வலை 5Ñ முதல் 7 வரையான அதிர்வலையாகும். இது ஆழ்ந்த உறக்கம் என கூற முடியாது. இதுவும் உறக்கம்தான். ஆனால் ஆழ்ந்த உறக்கம் அல்ல. இது போன்று உறங்குபவர்கள் 46 வயதுக்கு பின் பல நோய்க்கு ஆளாகிறார்கள்.

மனிதர்கள் மட்டும் அல்ல உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இரவில் தான் நன்றாக தூங்க வேண்டும். இரவில்தான் சந்திரன் என்ற கிரகத்தின் ஆளுமைக்கு நாம் ஆளாகிறோம். நாம் மட்டும் அல்ல விலங்குகள், பறவைகள் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் இரவில் நன்றாக உறங்குகின்றன. இரவில் நன்றாக உறங்கி ஓய்வு எடுப்பவர்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவது இல்லை. நாம் எப்போதும் இயற்கைக்கு ஒத்துதான் வாழ வேண்டும். பகலில் சூரியன் ஆளுமை என்பதால் பகலில் உழைத்து இரவில் உறங்க வேண்டும்.

உறக்கம் இல்லாமை என்பது இன்றைய கால கட்டத்தில் எல்லோரையும், பாதிக்க செய்கிறது. உறங்குவதற்கு சிலர் தூக்க மாத்திரைகள் பயன்படுத்துவது உண்டு. எத்தனை பேருக்கு தூக்க மாத்திரைகள் பயன்தரும்? ஒரு சிலருக்குத்தான் மாத்திரைகள், மருந்துகள் வேலை செய்யும்.

ஒரு சிலருக்கு மருந்து, மாத்திரைகள் வேலை செய்யாது. ஒரு சிலருக்கு முகாச்சார ரீதியாக லக்னத்திற்கு இந்தந்த இடத்தில் ராகு, கேது கிரகங்கள் வந்து அமையும் போதும் பார்வை படும்போதும் ராகு, கேது தசை புத்தி நடைபெறும் போதும் மருந்து மாத்திரைகள் பயன் தராது. பாம்பு தீண்டினாலும் அந்த விஷம் இவர்களை பாதிக்காது. இதுபோன்ற அமைப்பு ஒரு சிலருக்கு ஜனன ஜாதகத்தில் அமையப் பெற்றால் பாம்பு மற்றும் எந்த விஷ ஜந்துகள் தீண்டினாலும் பாதிக்காது.

மற்றவருக்கு கோச்சார காலம் தசை, புத்தி காலம் வரை இவை செயல்படும். எப்படிப்பட்ட ஜனன அமைப்பு உள்ளவருக்கும் வர்ம சிகிச்சை பயன்தரும் என்று அகத்தியர், போகர், தேரையர், புலிபானி சித்தர்கள் கூறி உள்ளார்கள். வர்மம் அறிந்தவர்கள், தியானம் அறிந்தவர்கள், தியானம் தவம் மூலம் பெற்ற இரையாற்றல் மற்றும் வர்ம சிகிச்சை (72,000 நாடி நரம்பு நிலைகளை அறிந்தவர்கள்) அளிப்பதால் நோயும், கர்மாவும் இவர்களை விட்டு விலகுகிறது.

ஒருவரை விட்டு கர்மா விலகும் நேரம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அவர் சித்த வர்ம மருத்துவத்தையே நாடிச் செல்கிறார். சித்த வர்ம மருத்துவத்தில் மட்டும்தான் ஒருவருக்கு நோய்க்கும் அவரது கர்மாவுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close