பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? ஸ்மார்ட் ப்ளீச் செய்யுங்க!

Loading...

பற்கள் அழகாய் இருந்தாலே முகம் பாதி அழகாய் மாறிவிடும். அதனால்தான் மாதவன் தொடங்கி ஸ்னேகா வரை அவர்களின் பளிச் பற்களுக்கென்றே பட்டப்பெயர் வைத்து அழைத்தோம். அப்படிப்பட்ட அழகான பற்களை இனி நீங்களும் பெறலாம் இந்த ஸ்மார்ட் ப்ளீச் லேசர் முறையில்.

நாம் சாப்பிடும் உணவு, காபி டீ அகியவை பற்களில் மஞ்சள் கரையினை தோற்றுவிக்கும். பின் அவை நிரந்தரமாக மஞ்சளாகவே இருக்கும். எவ்வளவுதான் பல் தேய பல் விளக்கினாலும் போகாது. உடனே அடுத்து என்ன செய்வோம் ? கடையில் போய் வொயிட்டனர் ஜெல் வாங்கி தினமும் உபயோகப்படுத்துவோம்.

இப்பொழுதெல்லாம் டூத் பேஸ்டுகளும் பற்களை வெள்ளையாக்க வந்துவிட்டது.ஆனால் தினமும் அவற்றை உபயோகப்படுத்தும் போது பற்களில் எனாமல் போய் பல் கூச்சம் வந்துவிடலாம்.

லேசர் முறையில் கறையில்லாத பற்கள் :

இவற்றையெல்லாம் விட சிறந்தது ஸ்மார்ட் ப்ளீச் என்ற சிகிச்சை. இது லேசர் முறையில் செய்யப்படுவது ஆகும். மேலும் முற்றிலும் பல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை. இதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் போதும்.

ஒரு தடவை செய்தாலும் நீண்ட நாட்களுக்கு பற்கள் பளிச்சென்றே இருக்கும். ஜெல் பேஸ்ட் எனத் தேட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு நம்பகமான தகுந்த பல் மருத்துவரை அணுகினால் இதனைப் பற்றி வளக்குவார்.

முன்னமே சொன்னது போல் சாதரணமாக, பற்களை வெள்ளையாக்கும் ஜெல் மற்றும் பேஸ்ட்டுகள் எனாமலை பாதித்து பல் கூச்ச்சத்தை உருவாக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட் ப்ளீச் முறை எனாமலை பாதிக்காது.. தைரியமாக செய்து கொள்ளலாம்.பக்க விளைவுகளற்றது.

ஏனென்றால் இந்த லேசர் முறை பற்களில் உள்ள கறையை மட்டுமே போக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதாகும். அவைகளை அடர்ந்த மஞ்சள் மற்றும் மற்ற கறைகளைன் மேல் மட்டும் செயல் புரிந்து அவற்றைப் போக்குகிறது.

மேலும் இவைகள் வலியினை உண்டாக்குவதில்லை. பச்சை வண்ணம் கொண்ட லேசர் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. வேறெந்த உணர்வும் இருக்காது. முக்கியமாய் மற்ற ஜெல்கள் உண்டாக்குவது போல் பல் கூச்சம் இருக்காது.

இது நீண்ட நாட்களுக்கு பயன் தரும். இந்த சிகிச்சை முறை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது , வலியில்லை , பல் கூச்சமில்லை , பக்க விளைவுகளில்லை , கை தேர்ந்த மருத்துவர்களால் செய்யப்படுகிறது.

ஆகவே நண்பர்களே இந்த ஸ்மார்ட் ப்ளீச் லேசர் முறையை தைரியமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பற்களில் எந்தவித கரையுமில்லாமல் , எதிரில் இருப்பவரை கவரும் வண்ணம் இனி அழகாய் புன்னகைக்கலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close