பெண்களை அதிகம் கவரும் பிளாட்டின நகைகளின் சிறப்பு தன்மைகள்

Loading...

மிக விலையுயர்ந்த பிளாட்டின நகைகளை வாங்கும் போது அதன் ஹால்மார்க் முத்திரைகளை பார்த்து வாங்குவது மிகவும் அவசியம்.

பெண்களை அதிகம் கவரும் பிளாட்டின நகைகளின் சிறப்பு தன்மைகள்
தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட உலோகமாய் திகழும் பிளாட்டினம் உலக அளவில் மிக பிரபலமான நகைகளாக உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பிளட்டினத்தில் நகைகள் என்பது அதிக கலையுணர்வு மற்றும் சிறப்பு செலுக்கல்கள் கொண்டதாக உருவாக்கப்படுகிறது.

மிக உறுதியும், எளிதில் ஏதும் தேய்மானம் ஏற்படாத உலோகம், கீறல் விழாத உலோகம் என்பதால் இதன் பொலிவு என்றும் ஒரு மாதிரியாகவே பளபளப்புடன் இருக்கும். மேலும் பாதரசம், நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம் என அமிலங்கள் எதிலும் கரையாதது பிளாட்டினம். இத்தகைய சிறப்பு மிக்க பிளாட்டினம் உலகம் முழுவதும் மிக குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.

கிடைப்பதற்கு அரிதாய் உள்ளதால் இதன் விலை அதிகம். இதன் பளபளப்பிற்கு உகந்த வகையில் வைர கற்கள் பதித்து நகைகள் நிறையை உருவாக்குவதால் பிளாட்டின நகைகள் மக்களின் மனதில் உயர் அந்தஸ்து பெற்ற நகையாக திகழ்கிறது.

பிளாட்டின நகைகளின் வடிவமைப்பு உத்திகள்…

பிளாட்டின நகைகளுக்கு என பிரத்யேக வடிவமைப்பு உத்திகள் கையாளப்படுகின்றன. இதன் மூலம் பிளாட்டின நகைகள் என்பது தனித்துவமும், அதிக பாதுகாப்பு தன்மை கொண்டவையாகவும் விளங்குகின்றது.

பிளாட்டின மோதிரங்கள் அதில் நடுநாயகமாக பொருத்தப்படும் வைரங்களுக்கு ஏற்ற செட்டிங்ஸ் கொண்டவாறு வடிவமைக்கப்படுகிறது. பிரேஸ்லெட் போன்றவைகளில் பதியப்படும் சிறுகற்கள் பார், சேனல், பிளஷ், பேவி போன்றவாறு வடிவமைப்பு வகைகளில் பதியப்படுகிறது.

பிளாட்டின மோதிர வளைவுகள் மற்றும் பினஷ் போன்றவையும் பல வகைப்பட்டதாய் உள்ளன. அதாவது மோதிர வளைவுகள் டி-ஷேப், டிரடிஷ்னல், பிளாட், பிளாட்-கோர்ட் போன்ற வடிவங்களிலும் அதன் பளபளப்புக்கு பாலிஷ் செய்யப்பட்டதும், மேட் என்ற பினிஷ், கல்பதித்தது, கத்தியால் அமுக்கப்பட்டவாறு என மேற்புற, பினிஷ்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதன் சிறப்பு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன.

பிளாட்டின நகைகளின் ஹால்மார்க்…

மிக விலையுயர்ந்த பிளாட்டின நகைகளை வாங்கும் போது அதன் ஹால்மார்க் முத்திரைகளை பார்த்து வாங்குவது மிகவும் அவசியம். உலகம் முழுவதும் பல நாடுகளில் வித்தியாசமான ஹால்மார்க் முத்திரைகள் பிளாட்டின நகைகளில் பதியப்பட்டிருக்கும்.

இந்தியாவில் பிளாட்டின நகைகளில் வலதுபுறம் Pt950 என்ற ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டிருக்கும். அமெரிக்கா போன் நாடுகளில் PLAT, Pt950, 950PT, PT900, PT850 என்ற பல ஹால்மார்க் முததிரைகள் அதன் சுத்தத்திற்கு ஏற்ப பதியப்பட்டிருக்கும். ஜப்பானில் Pt850, Pt950, Pt900, Pt 999 என்றவாறு ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டிருக்கும்.

பிளாட்டின நகைகள் பொலிவை பாதுகாக்க…

பிளாட்டின நகைகள் அதிக பயன்பாட்டின் போது அதன் பளபளப்பு மங்குவது நிகழும். எனவே அப்போது பிளாட்டின நகைகள் சிறிய சோப்பு தண்ணீரில் நனைத்து கழுவவும், இல்லையெனில் நகை கழுவும் திரவத்தில் கழுவலாம். அதிக காரத்தன்மை கொண்ட ரசாயன திரவம் ஏதும் பயன்படுத்த வேண்டாம். மேலும் சில திரவம் வைரக்கற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே அதற்கேற்ப பிளாட்டின நகைகளை சுத்தம் செய்தாலே போதுமானது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close