வீட்டில் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய 12 பொருட்கள்!!!

Loading...

சுத்தம் என்பது எவ்வளவு முக்கியமானது என உங்களுக்கு நாங்கள் சொல்லத் தேவையில்லை. நாம் நம்மை, நம்மை சுற்றியுள்ள பொருட்களை, இடங்களை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சிறு வயதில் நம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொடுத்திருப்பார்கள். ஆனால் எத்தனை பேர் இதனை கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சுத்தமாக இருப்பது உங்களை மட்டும் அல்லாது உங்களை சார்ந்தவர்களையும் உங்கள் சுற்றுச்சூழலையும் கூட ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சும்மாவா சொன்னார்கள் "சுத்தம் சோறு போடும்" என்று!

சுத்தமாக இருப்பது சரி தான். ஆனால் நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பது அவ்வளவு லேசான விஷயம் அல்ல. சுற்றுப்புறம் என இங்கே நாங்கள் குறிப்பிடுவது நம் வீட்டை தான். வீட்டில் இருந்து தானே சுற்றுப்புறம் தொடங்குகிறது. ஆனால் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது சுலபம் இல்லை. முடிவே இல்லாத வேலைகளே அவைகள். பொதுவாக சமையலறை தரை, மேடை மற்றும் கழிவறைகள் போன்றவற்றை நாம் சுத்தப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருப்போம். ஆனால் நாம் மறைந்துள்ள சில பொருட்களும் உள்ளது. அவைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

தலையணைகள்

படுக்கையின் போர்வைகளை சீரான முறையில் நீங்கள் துடைக்கவே செய்வீர்கள். ஆனால் நம்மில் பலரும் தலையணைகளை துவைக்க மறந்து விடுவோம்.

வாஷர் மற்றும் ட்ரையர்

டிடர்ஜென்ட்டை கொண்டு நீங்கள் உங்கள் ஆடைகளை சீரான முறையில் துவைப்பதால் உங்கள் வாஷரும் ட்ரையரம் கூட சுத்தமாக இருக்கும் என நீங்கள் நினைப்பீர்கள். சரி அது ரொம்பவும் அழுக்காகாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் வாஷரும் ட்ரையரும் நல்ல நிலையில் இருக்க ஒவ்வொரு 3 மாதமும் அதை சுத்தப்படுத்தவும்.

சமையலறை பாத்திரம் கழுவும் தொட்டி

ரசாயன துடைப்பான்கள் ஒரு தேர்வாக இருந்தாலும் கூட அவை தொட்டி மற்றும் அதன் குழாய்களுக்கு நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால் அதனை சுத்தப்படுத்துவதற்கு அரை கப் பேக்கிங் சோடாவை தொட்டியில் ஊற்றவும். பின் அரை கப் வினிகர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி கழுவவும். சிறிது நேரத்திற்கு அதனை அப்படியே விட்டு விடுங்கள். பின் வெந்நீரை ஊற்றி அலசவும்.

படுக்கையின் போர்வைகள்

கண்டிப்பாக இதனை சீரான முறையில் துவைப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். அதனை சுலபமாக்க, கூடுதலாக ஒரு செட் விரிப்பை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் துவைத்த விரிப்பு காயவில்லை என்றால் இரவு நேரத்தில் அவதிப்பட வேண்டியதில்லை பாருங்கள்.

குளியலறை கால் மிதிகள்

தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அதனை தேவையான அளவு நாம் துவைப்பதில்லை. தினமும் அது சேகரிக்கும் கிருமிகளின் அளவை சற்று எண்ணிப் பாருங்கள். அதனை மிகவும் சூடான தண்ணீரில் போட்டு துவைக்கவும். பின் அதனை காய வையுங்கள். தேவைப்பட்டால் ப்ரஷை கொண்டும் அதனை சுத்தப்படுத்தலாம். கூடுதல் செட் கால்மிதிகள் வைத்திருப்பதும் நல்லதே.

மேக்-அப் பிரஷ்கள்

பொதுவாக உங்கள் மேக்-அப் பிரஷ்கள், மிகுதியான அழுக்குகளுடன் உங்கள் மேக்-அப் பையின் அடியில் கிடக்கும். இதனால் சருமத்தில் பிளவுகள் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இந்த ப்ரஷை பயன்படுத்துவதால் எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியா ஆகியவைகள் மீண்டும் உங்கள் சருமத்திற்கே செல்லும். இந்த பிரஷ்களை சுத்தப்படுத்த, அதனை வெதுவெதுப்பான நீர் மற்றும் குழந்தைகளின் ஷாம்புவில் மென்மையாக கழுவவும். எளிய வழிமுறை தான்.

தரை விரிப்புகள்

சுத்தமில்லாத தரை விரிப்புகளை நினைத்தால் குமட்டல் தான் ஏற்படுகிறது. உங்கள் தரை விரிப்புகளில் தேங்கியிருக்கும் அனைத்து விதமான அழுக்குகளையும் யோசித்து பாருங்கள். ஷூ மற்றும் செருப்புகளில் இருந்து விழும் அழுக்கு, உன்னிகள், பாக்டீரியாக்கள், நாயின் ரோமங்கள், குழந்தைகளின் லீலைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் அதனை வாக்யூம் கிளீனரைக் கொண்டு தூசி தட்ட வேண்டும். அதனை கொண்டு தூசிகளையும், அழுக்குகளையும் நீக்குங்கள். அதன் பின் மிகவும் சூடான நீரில் இருந்து வரும் ஆவியில் அதனை காட்டவும். முடிந்தால் தரை விரிப்புகளை சுத்தப்படுத்தும் நபர்களை வருடத்திற்கு இரண்டு முறை அழையுங்கள்.

மெத்தை

பொதுவாக நம்மில் பலரும் மெத்தைகளை தேவையான அளவிற்கு துவைப்பதே இல்லை. கண்டிப்பாக இதனை சரியாக செய்பவர் யாருமே இருக்க முடியாது. மெத்தையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை படித்து, அதற்கேற்ப அதனை துவைக்க வேண்டும். அல்லது அதனை ஒரு ட்ரை கிளீனரிடம் கூட எடுத்துச் செல்லலாம்.

சோஃபா

சாய்விருக்கை மற்றும் அதன் மெத்தையை வாக்யூம் கிளீனரைக் கொண்டு வாரம் ஒருமுறை சுத்தப்படுத்தவும். ஏதேனும் கிளின்சரைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் தெளிவாகத் தோன்றாத ஒரு சின்ன இடத்தில் அதை பயன்படுத்தி பார்க்கவும். இதனால் மெத்தைக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை என்றால் பின் முழுவதுமாக பயன்படுத்தவும்.

கதவு கைப்பிடிகள்

இருமல், சளி மற்றும் ஃப்ளூ காலத்தின் போது கதவு கைப்பிடிகளை நீங்கள் அதிகமாக சுத்தப்படுத்துவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். ஆமாம் தானே? கிருமிநாசினி துடைப்பான்களை கொண்டு துடைப்பது தான் மிகவும் சிறந்த மற்றும் சுலபமான வழியாகும்.

தொலைப்பேசிகள்

வீட்டில் மற்ற சாதனங்களை விட நீங்கள் அதிகமாக பயன்படுத்துவது தொலைப்பேசியாக தான் இருக்கும். ஆனால் அதனை நம்மில் பலரும் சுத்தப்படுத்துவதே இல்லை. கிருமிநாசினி துடைப்பான்களை கொண்டு அதனை வேகமாகவும் சிறப்பாகவும் துடைத்து விடலாம். அதனை துடைக்க மற்றொரு வழியும் உள்ளது – பஞ்சுருண்டையை அல்கஹாலில் முக்கி, அதனை எண்கள் இருக்கும் இடம், தொலைப்பேசி கவர் ஆகிய இடங்களில் துடைக்கவும்.

ரிமோட் கண்ட்ரோல்

உங்கள் வீட்டில் நீங்கள் அதிகமாக பயன்படுத்தினாலும் கூட துடைக்காமல் போட்டு வைக்கும் சாதனங்களில் இதுவும் ஒன்றாகும். பஞ்சுருண்டையை அல்கஹாலில் முக்கி எளிதாக நுழைய முடியாத இடங்களில் எல்லாம் துடையுங்கள். வீட்டில் நோய்வாய் பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி ரிமோட்டை பயன்படுத்தி வந்தால் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் தானே!

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close