முகப்பரு தழும்பு அசிங்கமா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க!

Loading...

டீன் ஏஜ் வயதிலிருந்து 25 வயது வரை இருக்கிற பிரச்சனைகள் போதாதென இந்த முகப்பருவும் சேர்ந்து கொள்ளும். அப்படியே முகப்பரு போய்விட்டாலும் , அதனால் ஏற்படும் தழும்புகள் எளிதில் போகாது.

ரொம்ப வருடங்கள் ஆனாலும் பிடிவாதமாய் முகத்திலேயே இருந்து தொலைக்கும்.மேடு பள்ளமாய் காட்சி அளிப்பதோடு முக அழகினையும் கெடுக்கும். இப்படியெல்லாம் புலம்பிட்டு இருக்கீங்களா? அப்படியென்றால் இது உங்களுக்குதான் தொடர்ந்து படியுங்கள்.

முகப்பருத் தழும்பினை மேக்கப்பினால் மறைத்தாலும் அது நிரந்த தீர்வல்ல. இதற்காக கடை கடையாய் ஏறி இறங்கி போய் கண்ட கண்ட க்ரீம்களையும் வாங்க வேண்டாம் தோழிகளே! உங்கள் கண் முன்னாடி வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு தீர்வு காணலாம்.

முகப்பருவிற்கும் அதன் தழும்பிற்கும் எளிதில் டாட்டா காண்பிக்க இந்த ஸ்கரப்பை உபயோகிப்படுத்திப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

தேவையானவை : க்ரீன் டீ பேக் -2 சர்க்கரை -2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு- 1 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை :

க்ரீன் டீ பேக்கை சுடு நீரில் சில நிமிடங்கள் போட்டு வைக்கவும். அதன் பின் அதனை வெளியே எடுத்து , அதன் கவரைப் பிரியுங்கள். உள்ளிருக்கும் டீத் தூளை சில நிமிடங்கள் ஆற விடுங்கள்.

அதன் பின் அதனுடன் கடலை மாவு , சர்க்கரை சேர்த்து, தேவைப்படின் , மிகச் சிறிய அளவு நீரை சேருங்கள். நன்றாக கலக்குங்கள். கலவை கெட்டிப் பதத்திலேயே இருக்க வேண்டும்.

இப்போது இந்த கலவை ரெடி . அதனை முகத்தில் போட்டு தேயுங்கள். குறிப்பாக பருக்கள் உள்ள தழும்பினில் தேயுங்கள். அதிகமாய் அழுத்தம் தர வேண்டாம். இதனால் சருமம் சிவந்து எரிச்சல் தரும். நன்றாக தேய்த்த பின் 20 நிமிடங்கள் காய விடுங்கள்.அதன் பின் கழுவலாம்.

வாரம் இருமுறை செய்தால் நல்ல பலன்கள் தரும். பரு இருந்த இடமே தெரியாமல் போய் விடும். சருமம் மிருதுவாகி, பளபளப்பாக இஎருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close