கருவளையங்களை முழுமையாக போக்க சில டிப்ஸ்…

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கருவளையங்களால் அவஸ்தைப்படுவோம். இதற்கு காரணம் நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், நைட்-ஷிப்ட் வேலையும் தான் காரணம். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போய், கண்கள் சோர்வடைந்து, கண்களைச் சுற்றி கருவளையங்களை வரவழைக்கிறது.

மேலும் மரபணுக்கள், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, புகைப்பிடிப்பது போன்றவற்றினாலும் கருவளையங்கள் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கருவளையங்கள் ஒருவரது முகத்தை சோர்வாக வெளிக்காட்டுவதோடு, அசிங்கமாக வெளிக்காட்டும்.

எனவே கருவளையங்கள் வராமல் இருக்கவும், ஏற்கனவே இருக்கும் கருவளையங்கள் முழுமையாக மறையவும் ஒருசில டிப்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

தண்ணீர் குடிக்கவும்

உடலில் நச்சுக்கள் அதிகம் இருந்தாலும், தூக்கத்தை இழக்க வேண்டியிருக்கும். தினமும் தவறாமல் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். இப்படி செய்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

ஸ்பூன்

இரவில் படுக்கும் முன், சில்வர் ஸ்பூனை ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் காலையில் எழுந்த பின் அதனை கண்களின் மேல் வைத்து எடுக்க வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மற்றும் கண்களில் உள்ள வீக்கம் போன்றவை நீங்கும்.

குளிர்ந்த டீ பேக்

டீ பேக் கொண்டு டீ போட்ட பின், அதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனால் அதில் உள்ள உட்பொருட்கள் கருவளையங்களை மறையச் செய்யும்.

வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு

வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கண்களில் உள்ள சோர்வு நீக்கப்பட்டு, இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு, கருவளையங்கள் மறையும்.

தக்காளி ஜூஸ்

தக்காளி சாற்றில் சிறிது எலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, கருவளையம் விரைவில் நீங்கும்.

தூக்கம்

முக்கியமாக தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஒருவர் தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்றாலே, கருவளையம் வருவதைத் தடுக்கலாம்.

காபி

காபி அதிகம் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதற்கு காபியில் உள்ள காஃப்பைன் தான் காரணம். இது உடலை வறட்சியடையச் செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close