பெண்ணுறுப்பில் பயங்கர வலி, இந்த செயலை தவிர்க்க வேண்டும்: மகப்பேறு மருத்துவர் எச்சரிக்கை!

Loading...

பிரபல பிளாக்கர் எழுத்தாளரான மைக்கேல் பேரோ என்பவர் தனக்கு ஏற்பட்ட ஓர் விசித்திரமான நிகழ்வை, தனது வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்ட சம்பவம் தான் இது.

திடீரென மைக்கேல் பேரோவிற்கு விடாத அடிவயிற்று வலி ஏற்பட்டது. என்ன செய்தும் தீர்வுக் காண முடியாத மைக்கேல் பேரோ கடைசியில், மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய விளைந்தார். அப்போது தான் சற்றும் எதிர்பாராத விதமாக, மைக்கேல் பேரோவிற்கு ஏற்பட்ட தீராத வலிக்கு அவர் செல்லமாக வளர்த்து வந்த பூனை தான் காரணம் என தெரிய வந்தது.

பூனையின் ஹேர்பால்:

ஒருவேளை மைக்கேல் பேரோவின் பிறப்புறுப்பில் ஏதனும் பழைய நாப்கின் துண்டு அல்லது பழைய உறிபஞ்சுகள் (old tampon) இருக்குமோ என மகப்பேறு மருத்துவர் பரிசோதனை செய்தார். ஆதலால் கூட வலி ஏற்படலாம் என அவர் எண்ணினார். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் அவரது பிறப்புறுப்பில் பூனையின் ஹேர்பால் இருந்தது.

மைக்கேல் பேரோ பேரதிர்ச்சி அடைந்தார். இது எப்படி சாத்தியம்? என அனைவரும் வியந்தனர். பேரோ முதலில் அது அவரது முடி தான் என எண்ணினார். ஆனால், கடைசியில் அது பூனையின் முடி என கண்டறியப்பட்டது. மைக்கேல் பேரோ உடலுக்குள் பூனையின் முடி போனது எவ்வாறு என்ற கேள்வி மருத்துவர் மத்தியிலும் எழுந்தது.

தாம்பத்தியத்தின் போது:

ஆனால், இதற்கான பதில், மிக எளிதாக கண்டுபிடிக்கப்பட்டது. மைக்கேல் பேரோ தனது படுக்கையில் பூனைகளை மிக சாதாரணமாக விளையாடவிட்டுள்ளார். இதன் காரணத்தால், பூனையின் ஹேர்பால்கள் படுக்கை விரிப்பு முழுதும் படர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும், மைக்கேல் பேரோ தன் துணையுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது பூனையின் ஹேர்பால் எதிர்பாராத விதமாக உள் சென்றிருக்கலாம். என மகப்பேறு மருத்துவர் கூறினார்.

கவனம் அவசியம்:

நீங்கள் வளர்க்கும் நாய், பூனை போன்றவை பழக இனிமையானதாக இருக்கலாம். நீங்கள் செல்லமாக வளர்த்திருக்கலாம். அதற்காக, மிக நெருக்கமாக பழகுவது, விபத்தாக கூட விபரீத பிரச்சனைகள் உண்டாக காரணியாக இருக்கிறது.

இவ்வாறு நடக்க பெரியளவில் சாத்தியம் இல்லை எனிலும், மைக்கேல் பேரோவிற்கு நடந்தது போல குறைந்தபட்ச சாத்தியம் இருக்கிறது! எனவே, இனிமேல் உங்கள் செல்ல பிராணிகளை படுக்கையறை வரை கொண்டு சென்று வளர்ப்பதில் சற்று கவனமாக இருங்கள்!

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close