உடலை உறுதியாக்கும் தோப்பு கரணம்

Loading...

தினமும் காலை, மாலை இருவேளை தோப்பு கரணம் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.

உடலை உறுதியாக்கும் தோப்பு கரணம்
பிள்ளையார் முன்னாள் தோப்புகரணம் போடுவதும், குழந்தைகள் தவறு செய்தால் தோப்பு கரணம் போடு என பெரியவர்கள் சொல்வதும் நாம் சர்வ சாதாரணமாக அறிந்த செய்தி. இரண்டு காதுகளையும் கைகளை குறுக்காக பிடித்து கால் மடித்து அமர்ந்த நிலை வருவதும் அப்படியே மறுபடி எழுவதும்தான் தோப்பு கரணம் என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் இதன் பின்னே எத்தனை ஆரோக்கிய ரகசியங்கள் அடங்கியுள்ளது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

யோகா பயிற்சியில் இதனை மனித உடலில் உள்ள சக்கரங்கள் நன்கு தூண்டப்பட்டு இயங்க வைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
ஆய்வில் முக்கியமான நரம்புகள் நன்கு இருக்கப்பட்டு மேலும் மூளையுடன் தொடர்புடைய தண்டுவடம் மூளை நரம்புகளை கூடுதல் சக்தியுடன் இயக்குவிப்பதாகவும் அதனால் நம் மூளை பன் மடங்கு சக்தியுடன் செயலாற்றும் திறன் பெறுகின்றது என்றும் கூறப்படுகின்றது.

தினமும் காலையும், மாலையும் 21 முறை தோப்பு கரணம் செய்பவரின் உடல் வஜ்ரம் போல் உறுதியாகி மூளையும் திறம்பட செயல்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. வெளிநாட்டு ஆய்வில் இதனை மருந்தில்லா மூளையின் சக்தி என்கின்றனர்.
பொதுவில் தோப்பு கரணத்தினை காலையிலும் மாலையிலும் செய்வது நல்லது.

அதே போன்று பிள்ளையார் குட்டும் மூளையில் உள்ள பீனியில் சுரப்பிக்கு புத்துணர்வு ஊட்டுவதாக சொல்லப்படுகின்றது.
தோப்பு கரணத்தினை பிள்ளையாரை நோக்கி மட்டும்தான் போட வேண்டுமா என்ற கேள்வி அநேகரிடம் எழும். நமது முன்னோர் மனிதனின் ஆரோக்கியத்தினை பக்தியுடன் இணைந்து வழங்கினர். நீங்கள் இதனை பயிற்சியாக செய்தாலும் சிறந்ததே.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close