கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி?hair tips in tamil

Loading...

கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. சூரியன் நம்மை மிகவும் மோசமாக சுட்டெரித்துக் கொண்டிருக்கிறான். இதனால் சருமம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடியும் மிகுந்த பாதிப்பை சந்திக்கக்கூடும். எனவே கோடையில் சருமம் மற்றும் தலைமுடிக்கு அதிக பராமரிப்பைக் கொடுக்க வேண்டும்.

எப்படி பராமரிப்பு கொடுப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தான் தமிழ் போல்ட்ஸ்கை கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி உங்கள் தலைமுடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் தடவவும்

ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவை கோடையில் தலைமுடிக்கு ஏற்றவைகள். இந்த மூன்று எண்ணெய்களும் சூரியக்கதிர்களிடமிருந்து தலைமுடிக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். மேலும் இவை தலைமுடி வறட்சியடைவதை மற்றும் முடி தன் நிறத்தை இழப்பதைத் தடுக்கும். எனவே தினமும் தலைக்கு எண்ணெய் வையுங்கள்.

வினிகர்

வினிகரை நீரில் கலந்து, அதனை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி வர, முடி வறட்சி தடுக்கப்பட்டு, உச்சந்தலை அரிப்பதும் தடுக்கப்படும்.

தயிர்

உங்கள் தலைமுடி மிகவும் வறட்சியுடன், மென்மையின்றி இருப்பதை உணர்ந்தால், தயிரை ஸ்கால்ப் மற்றம் தலைமுடியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் அலசுங்கள்.

முடியை கட்ட வேண்டாம்

கோடையில் நீண்ட நேரம் முடியை கட்டி வைக்க வேண்டாம். அப்படி கட்டி வைத்தால், ஸ்கால்ப்பில் வியர்வை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கோடையில் முடிந்த வரையில் ப்ரீ ஹேர் விடுங்கள்.

தொப்பி அல்லது துணியால் பாதுகாப்பு கொடுக்கவும்

சூரியக்கதிர்கள் நேரடியாக தலையில் படுமாயின், தலைமுடி மோசமாக பாதிப்பிற்குள்ளாகும். எனவே வெளியே வெயிலில் செல்லும் முன் தொப்பி அல்லது துணியால் தலையைச் சுற்றிக் கொண்டு செல்லுங்கள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் சருமத்திற்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் நல்லது. உங்கள் உச்சந்தலையை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், வாரத்திற்கு ஒருமுறை வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, பின் அலசுங்கள்.

தண்ணீர்

தண்ணீரை விட சிறந்த ஒன்று வேறு எதுவும் இல்லை. வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பதன் மூலம், ஸ்கால்ப்பை குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள முடியும்.

Loading...
One Response
  1. June 11, 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close