உடல் பருமனால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?, weight loss tips in tamil

Loading...

உணவு முறை, உடல்நலக் குறைவுக் காரணங்களை விட, உடல் பருமனால் தான் நிறைய ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது.

உடல் பருமனால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?
உணவு முறை, உடல்நலக் குறைவுக் காரணங்களை விட, உடல் பருமனால் தான் நிறைய ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இது, தற்போதைய காலக்கட்டத்தில் பொதுவான பிரச்சனை போல உருமாறி நிற்கிறது.

முப்பது வயதை தாண்டியும் நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி எடுக்காவிடில் நிறையப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவும், இல்லற வாழ்க்கையில் நிறைய பாதிப்புகள் ஏற்படும். குழந்தை பேரு வேண்டி தவம் இருப்பவர்கள் கட்டாயம் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்….

ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் அதிக உடல் எடை காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றது. அதிக உடல் எடை உங்களது சாதாரணமான ஹார்மோன் செயல்பாட்டை குறைப்பதே இந்த பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மலட்டுத்தன்மையை சரி செய்ய மேற்கொள்ளும் சிகிச்சைகளையும் பயனற்று போக செய்யும் இந்த உடல் பருமன் என்பதை ஆண் பெண் இருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் கருத்தரித்த பிறகும் கூட, கருவின் வலுவின்மையால் கருச்சிதை ஏற்படுகிறது. பெண்களின் அதிக உடல் எடையும் கருச்சிதைவுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றது.

உடல் பருமனால் ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை மட்டுமின்றி, நீரிழிவு, இரத்த சர்க்கரை, இரத்த கொழுப்பு போன்ற பிரச்சனைகளும் சேர்ந்து அதிகரிக்கிறது.

உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிக நேரம் வேலை பார்ப்பது, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாதது போன்ற பிரச்சனைகள் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

முறையான பழக்கவழக்கம், சரியான உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றை சரியான கடைபிடித்தால் மட்டுமே உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் முடியும். ஆண்மை குறைவு பிரச்சனையையும் தவிர்க்க முடியும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close