மரணத்தை ஏற்படுத்தக்கூடிய குடல் புற்று நோய்!

பெண்களுக்கு வயிற்றில் குடல் பகுதியைத் தாக்கும் புற்று நோய் மிகவும் ஆபத்தானது. மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் பெண்களுள் முக்கால்வாசிப் பேர் அது பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர்.

பெண்களைப் பொதுவாகத் தாக்கும் ஏனைய புற்றுநோய்களான கருப்பை கழுத்துப் பகுதி புற்று நோய், சினைப் பை புற்று நோய் என்பன பற்றி அறிந்து வைத்துள்ளனர்.

ஆனால் இவை இரண்டாலும் பாதிக்கப்படும் ஒட்டு மொத்தப் பெண்களின் எண்ணிக்கையைவிட வயிற்றுக் குடல் பகுதிப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானதாகும்.

ஆனால் பொரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்த நோயின் அறிகுறிகள் பற்றிக் கூட அறியாதவர்களாகவே உள்ளனர் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நுரையீரல் புற்று நோய்க்கு அடுத்தபடியாக அதிக மரணத்தை விளைவிக்கும் நோய் இதுவேயாகும்.

வருடாந்தம் 17900 பெண்கள் குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கருப்பை கழுத்துப் பகுதி புற்று நோயால் 2830 பேரும், சினைப் பை புற்று நோயால் 6500 பேரும் மட்டுமே வருடாந்தம் பாதிக்கப்படுகின்றனர்.

இது தவிர மேலும் 48000 பெண்கள் வருடாந்தம் மார்புப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுள் 12000 பேர் மரணமடைகின்றனர். குடல் புற்று நோய்க்கு ஆண்களும் பெண்களுமாக வருடாந்தம் 16250 பேர் பலியாகின்றனர்.

பிரிட்டனில் மரணத்தை விளைவிக்கும் மூன்றாவது பெரிய புற்று நோயாக இது உள்ளது. ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிவதன் மூலம் இது பரவுவதை பெருமளவுக்குத் தடுக்கலாம் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Originally posted 2014-12-20 02:45:31. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *