மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி விடுதலைத் தரும் பழங்கள்!

Loading...

உங்களால் சரியாக மலம் கழிக்க முடியவில்லையா? தினமும் அதில் சிக்கலை உணர்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்கள் என்று அர்த்தம். ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனையானது மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் இருந்தால் ஏற்படும்.

இதனை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்து வராவிட்டால், அதுவே மிகவும் கடுமையான விளைவை உண்டாக்கும். இங்கு மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், அதிலிருந்து உடனடி விடுதலைக் கிடைக்க சாப்பிட வேண்டிய பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆப்ரிக்காட்

ஆப்ரிக்காட் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஊட்டச்சத்து நிபுணரான நேகா சந்த்னா தினமும் 2-4 ஆப்ரிக்காட் பழத்தை உட்கொண்டு, போதிய அளவில் நீரைப் பருகி வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையே வராது என்று கூறுகிறார்.

கிவி

கிவி பழத்தை உட்கொண்டால், குடலியக்கம் சீராக நடைபெறுவதோடு, மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பே இருக்காது என்கிறார். அதிலும் ஏற்கனவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்து, இப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் மலச்சிக்கல் நீங்கும்.

பச்சை பப்பாளி

பச்சை பப்பாளி மலச்சிக்கலைத் தடுக்கும். அதில் பச்சை பப்பாளியை அரைத்து ஜூஸ் எடுத்து, எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து, தினமும் குடித்து வர, அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் செரிமான நொதியால், குடலியக்கம் சீராக நடைபெறுவதோடு, மலச்சிக்கலும் விரைவில் நீங்கும்.

ப்ளம்ஸ்

மலச்சிக்கல் இருக்கும் போது ப்ளம்ஸ் பழத்தை 2-3 சாப்பிட்டு வர, மலச்சிக்கல் சீக்கிரம் தடுக்கப்படும். மேலும் ப்ளம்ஸ் சாப்பிட்டு சில மணிநேரத்தில், அது குடலை சுத்தம் செய்து, மலச்சிக்கல் அறிகுறியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதற்கு அதில் உள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்து தான் காரணம்.

ஆரஞ்சு

ஒரு பெரிய ஆரஞ்சு பழத்தில் 4 கிராம் நார்ச்சத்தும், 86 கலோரிகளும் உள்ளது. மேலும் இதில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவோனால், சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலில் இருந்து விடுதலைத் தருவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொடிமுந்திரி

உலர் பழங்களுள் ஒன்றான கொடிமுந்திரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒரு கொடி முந்திரியில் 1 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஸ்நாக்ஸ் நேரத்தில் கொடிமுந்திரியை உட்கொள்ளுங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வருவதைத் தடுக்கலாம்.

வாழைப்பழம்

மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் தரும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படுவதை அறவே தவிர்க்க முடியும்.

ஆப்பிள்

ஆப்பிளில் ஏராளமான அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. ஆகவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பெரும் தொந்தரவாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபடுங்கள்.

Loading...
One Response
  1. June 6, 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close