தாய் பாலுக்கு இணையான கழுதை பால் – ஆரோக்கிய நன்மைகள்!

Loading...

குழந்தைகளுக்கு தாய் பால் தருவது மிகவும் அவசியம். இந்த காலத்து இளம் தாய்மார்கள் தங்களுது உடலின் வடிவம் சீர்கெட்டு விடும், அழகு குறைந்துவிடும் என பல சாக்குபோக்குகளின் காரணமாய் குழந்தைகளுக்கு தாய்பால் தருவதை தவிர்த்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான அணுகுமுறை என லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கூறியும் பயனில்லாமல் இருக்கிறது. சரி, தாய் பாலுக்கு நிகரான ஊட்டச்சத்துகள் நிறைந்து வேறெதாவது உணவுகள் இருக்கின்றனவா என்றால், ஆம்! இருக்கிறது, கழுதை பால். கழுதை பாலா? என அச்சம் கொள்ள வேண்டாம். கழுதை பாலில் தாய் பாலுக்கு நிகரான ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

இது குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் அலர்ஜி, எலும்புகள் நல்ல வலுமை பெற, ஆஸ்துமா கோளாறுகள் நீங்க என பல நன்மைகளை அளிக்கவல்லது. இது மட்டுமின்றி, பசும்பால் ஒத்துப்போகாத குழந்தைகளுக்கு கூட கழுதை பால் ஒத்துப்போகும். இதுபோல நிறைய ஆரோக்கிய நற்பயன்களை குழந்தைகளுக்கு அளிக்கும் கழுதை பால் பற்றி நிறைய தெரிந்துக்கொள்ளலாம்…

உயர்த்தர ஊட்டச்சத்துகள்

கழுதை பாலில் வைட்டமின் பி , பி 12, சி மற்றும் நிறைய உயர்த்தர ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

தாய் பாலுக்கு இணையானது

கழுதை பாலில், தாய் பாலுக்கு இணையான அதிக கலோரிகளும், கனிமச்சத்துகள் இருகின்றன. இவை குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு வித்திடுகின்றன.

ஆஸ்துமா

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா கோளாறுகளுக்கு தீர்வளிக்க, கழுதை பால் உகந்தது. மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் எற்பட்டால் கழுதை பால் கொடுக்கலாம். இது நல்ல பயன் தரும்.

தொண்டை பிரச்சனைகள்

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தொண்டை பிரச்சனைகளுக்கு, கழுதை பால் ஓர் சிறந்த இயற்கை நிவாரணமாக திகழ்கிறது.

அலர்ஜி

பிறந்த குழந்தைகளுக்கு ஒருவேளை பசும்பாலின் மூலமாக உடலில் அலர்ஜிகள் ஏற்பட்டால், கழுதை பால் கொடுக்கலாம். இது, குழந்தைகளுக்கு அலர்ஜியை போக்க வல்லது.

சருமப் பிரச்சனைகள்

சருமப் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு கழுதை பால் தாருங்கள். இது, சருமப் பிரச்சனைகளை விரைவில் குணப்படுத்த உதவும்.

எலும்புகள் வலுவடைய

கழுதை பாலில் கால்சியம் சத்து அதிகப்படியாக இருக்கிறது. இதன் மூலம், குழந்தைகளுக்கு எலும்பு வலுவடைய கழுதை பால் கொடுத்தால் நல்ல பயன் தரும்.

வைட்டமின் சி

தாய் பாலுடன் ஒப்பிடுகையில் 6௦ சதவீதம் வைட்டமின் சி சத்து அதிகமாக கழுதை பாலில் உள்ளது. இது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close