உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

Loading...

உங்களுக்கு முடி வளரமாட்டீங்குதா? எத்தனையோ எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் முடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை என்று தான் அர்த்தம்.

என்ன தான் முடி வேகமாக வளரும் என்று கடைகளில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், சரியான சத்துக்கள் முடிக்கு கிடைக்காமல் போனால் அதன் வளர்ச்சி தடைப்படத் தான் செய்யும்.

எனவே முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய செயல்களைப் பின்பற்றி வந்தாலே போதும். நிச்சயம், முடியின் வளர்ச்சியைக் காணலாம்.

வாழைப்பழ மாஸ்க்

2 வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முடியின் வளர்ச்சியில் மாற்றத்தைக் காணலாம்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் முடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. எனவே இதனைக் கொண்டு வாரம் ஒருமுறை நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலசி வர, முடி நன்கு வளரும்.

முட்டை மாஸ்க்

1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அத்துடன் 1 கப் பால், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து, ஸ்கால்ப்பில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வருவதன் மூலம் முடி ஆரோக்கியமாக வளரும்.

ஆயில் மசாஜ்

வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் ஸ்கால்ப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் வலிமைப் பெறும்.

மன அழுத்தம் வேண்டாம்

மன அழுத்தம் முடியின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்தும். ஆகவே உங்களுக்கு முடி நன்கு வளர வேண்டுமானால், மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களான தியானம், மூச்சுப் பயிற்சி மற்றும் இதர மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகள்

முடி வளர முடிக்கு மட்டும் பராமரிப்பு கொடுத்தால் போதாது, புரோட்டீன், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை நிறைந்த உணவுகளான முட்டை, பால், தயிர், சீஸ், பசலைக்கீரை, சால்மன், முட்டைக்கோஸ், ஓட்ஸ், அவகேடோ, ப்ரௌன் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

முடி வெடிப்புக்களை நீக்கவும்

அடிக்கடி முடியின் முனைகளில் உள்ள வெடிப்புக்களை வெட்டி விட வேண்டும். ஏனெனில் இவை முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆகவே மாதத்திற்கு ஒருமுறை இச்செயலை தவறாமல் செய்ய வேண்டும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close